பண வரவு அதிகரிக்க இன்று இதனை செய்திடுங்கள்
யோகா செய்யாதீர்கள் உங்கள் முழங்கால்களுக்கு ஆபத்து! இந்திய டாக்டர் கடும் எச்சரிக்கை
தினமும் யோகா செய்வது உங்கள் கர்மாவுக்கு வேண்டுமானாலும் நல்லது செய்யலாம், ஆனால் உங்கள் முழங்கால்களுக்கு அது ஆபத்தாகிவிடக் கூடும் என்று இந்திய எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். பல முன்னணி யோகா ஆசிரியர்கள் மற்றும் குருமார்களுக்கு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள டாக்டர் அசோக் ராஜகோபால் அண்மையில் ஒரு பத்திரிகை பேட்டியில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அவரது கூறியதிலுள்ள உண்மை யோகாவை வர்த்தமாக்கிவிட்ட பலருக்கு சவாலாகிவிட்டது. காரணம் இன்றைய தேதியில் யோகாதான் உலகம் முழுவதும் எளிதாக பணம் குவிக்கும் தொழில்முறையாக மாறி இருக்கிறது. இத்தகைய யோகா மையங்கள் கூறுவது என்னவென்றால், நீங்கள் தினமும் யோகா செய்தால் உங்கள் இளமையை தக்க வைக்கலாம், ஆரோக்கியமும் ஆயுளும் அதிகரிக்கும், உடல் நலம் பேணலாம், உலக அமைதிக்கான வழி யோகாவில் மட்டுமே சாத்தியம் என்று இப்படி பலவிதமான நம்பிக்கைகள் விதைத்துவருகிறார்கள். இவற்றில் உண்மை இருக்கலாம். ஆனால் யோகாவை கற்றுக் கொடுப்பவர்கள் முதலில் அதனை முழுமையாகவும் முறையாகவும் கற்றுத் தேற வேண்டும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உலகளாவிய கவனத்தை உருவாக்கிய இந்தியாவின் பாபா ராம்தேவைப் போன்ற மிக கவர்ச்சிகரமான யோகா ஆசிரியர்களில் சிலர், அதன் மூச்சு பயிற்சிகளால் எய்ட்ஸ், புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்களை குணப்படுத்த முடியும் என நம்புகின்றனர். அமெரிக்காவில் மட்டும், ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர்களுக்கும் மேலதிகமாக யோகா உபகரணங்களுக்காக செலவழிக்கப்படுகிறது. மேலும் 15 மில்லியன் மக்கள் தீவிரமான யோகப் பயிற்சியாளர்களாக உள்ளனர்.
டாக்டர் ராஜகோபாலின் கூற்றின் படி, யோகாவை செய்யும்போது ஒருவரின் இதயம் விரிவடைகிறது, இத்தகைய தீவிர பயிற்சிகள் ஒருவரின் மூட்டுகளில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன, தொடர்ந்து செய்து வருகையில் இது மூட்டுவலிக்கு வழிவகுக்கிறது.
அதுவும் யோகாவை தினமும் செய்பவர்களுக்கு எலும்பு வியாதிகள் அதிகளவில் காணப்படுகிறது. சரியான சூழ்நிலையில் முறையாக செய்யப்படும் யோகா அற்புதமாகத்தான் இருக்கும், ஆனால் யோகாவை மக்கள் கூட்டம் கூட்டமாக கற்றுக் கொள்ள பயிற்சியளிக்கப்படுகையில் அவர்கள் கவனமாகக் கற்றுக் கொள்வதில்லை, உத்தேசமாகவே செய்கின்றனர். எனவே தவறாகக் கற்றுக் கொண்ட ஒரு பயிற்சியை அது தவறெனவே தெரியாமல் தினமும் உடலை பிரயாசைப்படுத்தி செய்வதன் மூலம் அது அவர்களைக் காப்பாற்றுவதற்கு பதிலாக பிரச்னைகள் விளைவித்துவிடுகின்றன’ என்று டாக்டர் அசோக் கூறினார்.
‘பல யோகா ஆசிரியர்களுக்கு நாங்களே முழங்கால் அறுவை சிகிச்சை செய்துள்ளோம். தினமும் பலவிதமாக செய்து கொண்டிருந்த யோகா உடல் இயக்கங்களினால் (postures) கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று டாக்டர் ராஜகோபால் ‘தி டெய்லி டெலிகிராப்’ பத்திரிகையாளரிடம் கூறினார்.
‘இத்தகைய யோகா பயிற்சியில் தீவிரமாக தினந்தோறும் ஈடுபடும்போது முழங்காலில் கடுமையான, ஆழமான வளைவுகள் ஏற்படும். உடலில் ஏற்பட்ட அழுத்தங்களின் காரணமாக அவை தீங்கு விளைவிக்கும், மற்றும் குருத்தெலும்புகளில் சேதம் விளைவிக்கும். Read more about யோகா செய்யாதீர்கள் உங்கள் முழங்கால்களுக்கு ஆபத்து! இந்திய டாக்டர் கடும் எச்சரிக்கை …