இன்றைய ராசி பலன் | ஜனவரி 17 –2021

மேஷம்

நாள் -

நாள் - 17-1-2021

சந்திரன் இன்றைய தினம் லாப ஸ்தானத்தில் பயணிக்கிறார். வியாபாரத்தில் லாபம் வரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். வீட்டில் சுப காரியம் நடைபெறும். எந்த வேலையையும் புது பொலிவுடனும், தெம்புடனும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் லாபம் அதிகரிக்கும்.

ரிஷபம்

நாள் -

நாள் - 17-1-2021

சந்திரன் பத்தாம் வீட்டில் பயணிக்கிறார். இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினை தீரும். பெரியவர்களின் நட்பு கிட்டும். வீட்டு தேவைகள் யாவும் நிறைவேறும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

மிதுனம்

நாள் -

நாள் - 17-1-2021

சந்திரன் ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீக பயணம் மன அமைதியை தரும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடகம்

நாள் -

நாள் - 17-1-2021

சந்திரன் எட்டாம் வீட்டில் பயணிக்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. இன்று குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். மனதில் இனம் புரியாத கலக்கம் உண்டாகும்.

சிம்மம்

நாள் -

நாள் - 17-1-2021

சந்திரன் ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று இனிய செய்திகள் வீடு தேடி வரும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

கன்னி

நாள் -

நாள் - 17-1-2021

சந்திரன் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உயர் பதவிகள் கிடைக்ககூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வியாபார ரீதியாக வெளிமாநில தொடர்பு ஏற்படும்.

துலாம்

நாள் -

நாள் - 17-1-2021

சந்திரன் ஐந்தாம் வீட்டில் பயணிக்கிறார். இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழிலில் இருந்த எதிரிகளின் தொல்லை குறைந்து முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சினைகள் நீங்கும்.

விருச்சிகம்

நாள் -

நாள் - 17-1-2021

சந்திரன் நான்காம் வீட்டில் பயணிக்கிறார். இன்று குடும்பத்தில் அசையா சொத்து வழியில் செலவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

தனுசு

நாள் -

நாள் - 17-1-2021

சந்திரன் மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். அலுவலகத்தில் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சினைகள் குறையும்.

மகரம்

நாள் -

நாள் - 17-1-2021

சந்திரன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணிக்கிறார். பணவரவு நன்றாக இருக்கும். இன்று வேலையில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு லாபம் கிடைக்கும்.

கும்பம்

நாள் -

நாள் - 17-1-2021

சந்திரன் உங்கள் ராசியில் பயணிக்கிறார். இன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உடன் பிறப்புகள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். முக்கிய முடிவுகள் தொடர்பாக யோசித்து முடிவெடுக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்

நாள் -

நாள் - 17-1-2021

சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் விருத்திக்காக போட்ட முதலீடுகளில் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.