ஒரே மாதிரியான இட்லி போரடிக்குதா, அப்படினா இதை செய்து பாருங்கள்!!

Updated On

ஒரே மாதிரியான பழைய சாதாரண இட்லியை மீண்டும் மீண்டும் சுவைப்பதில் பலருக்கும் சலிப்பு ஏற்பட்டிருக்கும், அதனால் இந்த சுவையான காரமான இட்லி செய்முறையை முயற்சித்து பாருங்கள். நல்ல காரமான மசாலாவை இட்லியின் நடுவில் வைத்து சமைத்து பாருங்கள்.

இது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் பிடிதமானதகவும், அரோகிமனதகவும் இருக்கும். இதை அடைத்த இட்லி, சாண்ட்விச் இட்லி அல்லது மசாலா இட்லி என்றும் அழைக்கின்றனர்.
இந்த இட்லியை உடனடியாக சமைக்க ரவா இட்லி மாவை பயன்படுத்தலாம். நம் வீட்டில் இட்லி மாவு இருந்தால் அதிலும் செய்யலாம். மசாலா மட்டும் செய்தால் போதும் அடைத்த இட்லி மிகவும் எளிதாக செய்துவிடலாம். உருளைக்கிழங்கு மசாலா இதற்கு சுவையாக இருக்கும், அல்லது அனைத்து காய்கள் வைத்தும் செய்யலாம்.

விரிவான செய்முறையை கிழே பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

ரவா இட்லி மாவு செய்ய தேவையான பொருட்கள்

 

  1. 1 கப் வறுத்த ரவா / ரவை
  2. 1 கப் தயிர்
  3. உப்பு தேவையான அளவு
  4. பேக்கிங் சோடா (விரும்பினால்
    தேவைக்கேற்ப)
  5. தண்ணீர் தேவைக்கேற்ப

உருளைக்கிழங்கு மசாலா செய்ய தேவையான பொருட்கள்

 

  1. வேகவைத்த 3 நடுத்தர உருளைக்கிழங்கு
  2. 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  3. 2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  4. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  5. ½ தேக்கரண்டி மஞ்சள் தூள்
  6. கடுகு சிறிதளவு
  7. கறிவேப்பிலை ஒரு கொத்து
  8. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  9. சீரகம் அரை தேக்கரண்டி
  10. உப்பு சுவைக்கேற்ப தேவையான அளவு

செய்முறை

உருளைக்கிழங்கு மசாலா செய்முறை:

 

  • உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சூடானதும், கடுகு, ஜீரா, கறிவேப்பிலை ஆகியவற்றை வெடிக்கவும்.
  • இப்போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலக்கவும்.
    நறுக்கிய மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து இளஞ்சிவப்பு நிறமாக மாறும் வரை வறுக்கவும்.
  • வெங்காயம் நிறம் மாறியதும், மஞ்சள் சேர்த்து சரியாக கலக்கவும்.
  • பின்பு மசித்த உருளைக்கிழங்கு மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து சரியாக கலக்கவும்.
  • மசாலா சூடாக இருக்கும், எனவே அவற்றை சிறிது நேரம் ஆறவிடவும்.
  • கலவையிலிருந்து சிறிய பந்துகளை உருவாக்கி, அவற்றை ஒரு பஜ்ஜியாக தட்டையாக தட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

உடனடி இட்லி மாவு செய்முறை:

 

  • ஒரு பெரிய கிண்ணத்தில், 1 கப் வறுத்த ரவா சேர்க்கவும்.
  • அதற்கு 1 கப் தயிர் (சற்று புளிப்பு தயிர் பயன்படுத்துவது நல்லது. இருப்பினும் அது கட்டாயமில்லை.)
  • ¼ கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • தேவைப்பட்டால் தண்ணீரை சற்று அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். இட்லி மாவு தன்மைக்கு கொண்டு வாருங்கள்.
  • மாவை 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • 30 நிமிடங்களுக்குப் பிறகு ½ தேக்கரண்டி பேக்கிங் சோடாவைச் சேர்த்து கிளறவும்.
  • மாவு சற்று நுறையாக மாறுவதை இப்போது நீங்கள் காணலாம். மேலும் கலக்க வேண்டாம்.
  • இட்லி தட்டுகளை தயார் செய்து, இட்லி பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • ஒவ்வொரு குழியிலும் 1 டீஸ்பூன் ( கால் பங்கு) இட்லி மாவை ஊற்றவும், பின்பு மாவின் நடுவில்
    தட்டையான உருளைக்கிழங்கு மசாலாவை வைக்கவும்.
    நிரப்புவதற்கு மீண்டும் 1 டீஸ்பூன் இட்லி மாவை ஊற்றவும்.
  • அனைத்து இட்லி தட்டுகளையும் இட்லி பாத்திரத்தினுள் வைத்து 12 -15 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  • பின்பு 3-4 நிமிடங்களுக்கு அதை ஆறவிடவும்.

 

இட்லிதட்டிலிருந்து எடுத்து சூடாக, சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறவும். தேங்காய் சட்னி மிகவும் பொருத்தமாக இருக்கும்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore