ஆரோக்கியமான ஜவ்வரிசி இட்லி செய்வது எப்படி???

Updated On

ஒரு ஆரோக்கியமான காலை உணவிற்கு ஜவ்வரிசி இட்லி மிகவும் சிறந்ததாகும். ஒரு பிஸியான காலை நேரத்திற்கு மாவு அரைக்க தேவையில்லை. உளுந்து பருப்பு தேவையில்லை.
ஜவ்வரிசி, ரவா மற்றும் தயிர் இருந்தால் போதுமானது.
வழக்கமான இட்லிக்கு மாற்றாக இது புதுவிதமான சுவை மற்றும் அனுபவத்தை தருகிறது.
குழந்தைகளுக்கு காலை உணவை பிடிதமனதகவும், அரோக்கிமனதகவும் மாற்ற ஜவ்வரிசி இட்லி சிறந்த ஒன்றாகும்.
இதில் வைட்டமின் டி நிறைந்து உள்ளதால் எலும்பு மற்றும் தசைகளுக்கு ஒரு சிறந்த பலனைத் தருகிறது.
உடல் எடையை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் இது உதவுகிறது.

அடைத்த மசாலா இட்லி

ஜவ்வரிசி இட்லி செய்முறை

தேவையான பொருட்கள்

 

  • 1/2 கப் ஜவ்வரிசி
  • 1 கப் ரவை
  • 2 கப் தயிர்
  • 1-2 கப் தண்ணீர் தேவைக்கேற்ப
  • உப்பு தேவைக்கேற்ப
  • சமையல் சோடா சிறிதளவு (விரும்பினால்)
  • முந்திரி
  • எண்ணெய் சிறிதளவு

வழிமுறைகள்

  • ஒரு பெரிய பாத்திரத்தில் அரை கப் ஜவ்வரிசியை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அதனுடன் 1 கப் இட்லி ரவா சேர்க்கவும்.
  • 2 கப் புளிப்பு தயிர் சேர்க்கவும்.
  • 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பின்னர் அதை ஒரு மூடி போட்டு குறைந்தது 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
  • மாவை நன்றாக கலக்கவும்.
  • மாவின் பததிற்கேற்ப சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும்.
  • தேவைப்பட்டால், வேகவைப்பதற்கு முன்பு ஒரு சிட்டிகை சமையல் சோடாவைச் சேர்த்து, அது நுரையக மாறும் வரை நன்கு கலக்கவும்.
  • இட்லி தட்டில் எண்ணெய் தடவி ஒவ்வொரு அட்சிற்கும் ஒரு முந்திரியை வைக்கவும் அடுத்து தட்டில் இட்லி மாவை ஊற்றவும்.
  • நடுத்தரதீயில் 10-12 நிமிடங்கள் வேகவைக்கவும். 5 நிமிடங்கள் விட்டு இட்லியை எடுக்கவும்.

இறுதியாக, உங்களுக்கு விருப்பமான எந்த சட்னி மற்றும் சாம்பாருடனும் சூடாக பரிமாறலாம்.

 



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore